சென்ற வருடம் நான் பர்வத மலை சென்ற போது சதுரகிரி மலையை பற்றி கேள்விப்பட்டேன். அதிலிருந்து எனக்கு அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அமாவாசை அன்று சென்றால் மிக சிறப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டு வார இறுதியில் வரும் அமாவாசை அன்று தேர்ந்தெடுத்து இரயிலில் முன்பதிவு செய்தோம். செப்டம்பர் 15 அன்று அமாவாசை ஆதலால் 14 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செப்டம்பர் 15 அன்று காலை 7 மணிக்கு சென்று சேர்ந்தோம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில் நிலையத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக ராஜா லாட்ஜ் சென்றோம். நான்கு பேர் தங்க ரூ. 580 கொடுத்தோம். குளித்து முடித்து அங்கிருந்த ஹோட்டலில் காலை உணவு அருந்தி பிறகு மதிய உணவு கையில் எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றோம். சிறப்பு பேருந்து மூலமாக வத்ரா யிருப்பு வழியாக தாணிப்பாறை என்கிற சதுரகிரி மலையின் அடிவாரம் வந்து சேர்ந்தோம். தானிப்பாறை 10.45 மணிக்கு சென்றடைந்தோம். பேருந்துக் கட்டணம் ரூ.20. தானிப்பறையிலிருந்து சதுரகிரி மலையை நோக்கி எங்கள் பயணம் ஆரம்பமானது.
சதுரகிரி மலை
சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.
சதுரகிரி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் வத்றாப் (watrap) என அழைக்கப்படும் வத்திறாயிருப்பு அருகில் உள்ள தாணிப்பாறையில் உள்ளது. வத்றாப்பிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவிலும், வத்றாப் விலக்கிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் தாணிப்பாறை அமைந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (30 கி.மீ)
தாணிப்பாறைக்குச் செல்ல வேறு 2 வழிகளுண்டு. ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதான்.
விசேஷ தினங்களில் சிறப்பு அரசுப் பேருந்துகள் தாணிப்பாறைக்கு இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பேருந்து வசதி உண்டு. ஷேர் ஆட்டோக்களும் இயங்குகின்றன. ஆட்டோவில் பத்து கிமீ பயணத்திற்கு தலைக்கு பத்து ரூபாய் மட்டுமே!
தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், கொய்யாத் தோப்புகளும் சூழ தாணிப்பாறை ரம்மியமாய் காட்சியளிக்கும். மலையின் அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய எட்டு கிமீ தூரத்தில் உச்சியில் மகாலிங்கம் சன்னதி அமைந்துள்ளது. ஒரு மலையல்ல, இரு மலையல்ல.. ஏழு மலைகளைக் கடந்துதான் கோவிலைச் சென்றடைய முடியும்.
மலைகள் சுற்றிலும் சதுர வடிவில் அமைந்த படியால் சதுரகிரி என்று பெயர்பெற்றதாகவும் சொல்கிறார்கள். நான்கு பெரிய மலைகள் கோவிலைச் சுற்றிலும் அரண் போல் அமைந்திருப்பதாலும் அவ்வாறு பெயர் பெற்றதாகச் சொல்வதும் உண்டு. ‘சதுர’ என்றால் நான்கு, ‘கிரி’ என்றால் மலை.
சுற்றிலும் பெரிய மலைகள் இருந்தாலும் சிறு சிறு கிளை மலைகளும் உண்டு. இவற்றையெல்லாம் தாண்டித்தான் மேலே செல்ல வேண்டும். ஒரு மலைக்கும் இன்னொரு மலைக்கும் இடைப்பட்ட பகுதி காட்டாற்றின் போக்கிடமாக உள்ளது.
தாணிப்பாறையில் நுழைந்ததும் சற்றுத் தொலைவில் விநாயகர், ராஜகாளி அம்மன், பேச்சியம்மன் மற்றும் கருப்பசாமிக்குக் கோவில்கள் உள்ளன.
மலைஏற பொதுவாக சிரமமாக இருக்கும். அதிலும் சுமையுடன் ஏறுவது கடினம். மலைப்பாதை பெரும்பாலும் அருவியின் பாதையை ஒட்டியே அமைந்திருக்கிறது. மழைக்காலங்களில் சிறு நீரோடை தண்ணீர் பாய்ந்து வருகிறது.
சுமார் 6 லிருந்து 10 அடி மட்டுமே அகலம் கொண்ட சுமார் 8 கிமீ நீள கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையில்தான் பயணம். ஒரு பக்கம் பகலவனும் கதிர்களை உட்செலுத்த அஞ்சும் அடர்ந்த காடு. மறுபக்கம் தடுக்கி விழுந்தால் அதல பாதாளம். பாதுகாப்பிற்குக் கைப்பிடி கம்பிகள் கூடக் கிடையாது. இந்த ஆறடிப் பாதையில்தான் துணிகரப் பயணம். ஏற ஆரம்பிக்கும்போது உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது.
ஏற ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே நாக்குத் தள்ள ஆரம்பித்துவிடும். ‘புஸ் புஸ்’ஸென்று வெளிப்படும் மூச்சு, பேசாமல் கீழேயே இருந்திருக்கலாம் என்று சொல்லும்!. மேலே ஏற ஏற தன்னம்பிக்கை குறைவது போல இருக்கும்.
நாங்கள் சென்ற போது மதியம் 12 மணி ஆதலால் வெயில் அதிகமாக இருந்தது. இரவு தங்க முடிவு செய்திருந்ததால் துணி மற்றும் உணவு சுமை அதிகமாக இருந்ததால் எளிதில் களைப்படைந்துவிட்டேன்.
பழக்கப்பட்ட ஆட்களுடன் முதல் முறை ஏறுவது மிகவும் நல்லது. ஆனால் கஷ்டப்பட்டு மலையேறி கோவிலைச் சென்றடைந்தவுடன் மனதில் இருக்கும் பெரும் வாழ்க்கைப் பாரங்கள் குறைந்தது போலிருக்கும்.
இப்பேர்ப்பட்ட கடினமான பாதையையே கடந்து வந்துவிட்டோமே வாழ்க்கை என்னடா வாழ்க்கை.. அதிலுள்ள கஷ்டங்களெல்லாம் சும்மா தூசு.. என்ற பக்குவப்பட்ட மனநிலை வந்துவிடும். மீண்டும் மீண்டும் மலையேறத் தோன்றும். மனம் தளராமல் நடக்க வேண்டுமென்றால் ஒரே வழி மூச்சை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் மூச்சிறைப்பது போல இருந்தாலும் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் அவ்வளவுதான்.
எதிரே வருபவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் ஏற வேண்டும் என்ற கேள்வியைக்கேட்காதீர்கள். பெரும்பான்மையாக உங்களுக்கு ஆதரவாக ’கொஞ்சதூரம்தான்’ என்ற பொய்யான பதிலே வரும்.
சற்று நிதானமாக, நடக்கும் பாதையில் முழு கவனமும் வைத்து நெஞ்சில் சிவனை நிலைநிறுத்தி ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து, சுற்றிலும் காணும் இயற்கையையும் ரசித்து, மூச்சிறைத்தாலும் மெதுவாக மூச்சை வெளியிட்டு, எங்கேயும் உட்காராமல் தொடர்ந்தாற் போல மேலேறிவிட்டால் இரண்டே மணிநேரம்தான். நாங்கள் அதிக நேரம் ஒய்வு எடுத்து மெதுவாக மேலே செல்வதற்கு 5 மணி நேரம் ஆனது.
ஆனால் கீழே இறங்குவது சற்று எளிது. பழக்கமானவர்கள் ஒன்றரை மணிநேரத்தில் இறங்கிவிடலாம். புதியவர்களுக்கு மூன்று மணி நேரம். வீட்டுக்கு வந்தவுடன்தான் தெரியும், தொடைகளில் தசைப்பிடிப்பும், கணுக்கால் வலியும். மூன்று நாட்களில் சரியாகிவிடும்! முடிந்தவரை அதிக பாரங்கள் கொண்டுசெல்வதைத் தவிர்த்தல் நல்லது.
முதல் மலை அதிக ஏற்றஇறக்கம் இன்றி சிரமம் இன்றி இருந்தது. இன்னும் செல்லச் செல்ல வழியில் தென்பட்டது குதிரை ஊத்து. அதைக்கடந்து இன்னும் மேலே செல்லச் செல்ல வழுக்குப்பாறை என அழைக்கப்படும் படிவெட்டிப்பாறை இருந்தது. படிகள் மிகச் சிறியதாக இருந்தாலும் பயமின்றி நடக்கலாம்.
அதைக்கடந்து மேலே கோணத்தலவாசல் என்கிற Z வடிவிலான மலைஏற்றத்தைத் தாண்டினோம். அதிலிருந்து இன்னும் மேலேற காரம்பசுத்தடம் என்கிற இடத்தை தாண்டினோம். கோணத்தலவாசல் என்பது சற்றே கடினமான ஏற்றத்தின் ஆரம்பம். அதைத்தாண்டி சிறிது நேர பயணத்தில் கோரக்கர் குகை, நாங்கள் அதைப்பொருட்படுத்தாது மேலே ஏறிவிட்டோம்.
கோரக்கர் சித்தரால் வணங்கப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள் இரண்டு குகைகளில் உள்ளன. இவ்விடம் கோரக்கர் குண்டா என்றழைக்கப்படுகிறது.
அத்திரி மகரிஷி தங்கியிருந்த இடம் அத்தியூத்து என்று அழைக்கப்படுகிறது. ரெட்டைலிங்கம் என்றழைக்கப்படும் இரு லிங்கங்கள் மேலே செல்லும் வழியில் உள்ளன. இங்கே வந்தடைந்தால் சுமார் பாதிதூரம் வந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம்.
இடைப்பட்ட சுமார் ஒன்றரை கிமீ தூரம் மட்டுமே சற்றே கடினம். மற்றவை எளிதில் ஏறிவிடலாம். இன்னும் கால்மணிநேரம் நடந்தால் வருவது குளிராட்டி சோலை எனப்படும் மரங்கள் அடர்ந்த சோலைவனப்பகுதி. இது வரை ஏறிவந்ததில் இருந்த களைப்பு தானாக தீரும் வண்ணம் இதமான குளிர் உடலையும் மனதையும் வருடியது. சற்றே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.
இங்கு எந்தப் பொருளானாலும் மலை மேலே கொண்டு செல்ல மனித சுமைதூக்கிகள்தான் வேண்டும். 35 கிகி எடை வரை தூக்க 150 ரூபாயும், அதற்குமேல் எடையுள்ளவற்றைத் தூக்கிச் செல்ல 200 ரூபாயும் வாங்குகின்றனர்.நடக்க முடியாதவர்களைத் தூக்கிச் செல்லவும் கூலிகள் உண்டு. சுமார் இரண்டாயிரம் வரை வாங்குகின்றனர்.
இங்கே கிடைக்காத மூலிகைகள் உலகில் வேறு எங்குமே கிடைக்காதெனலாம். அந்த அளவிற்குக் கொட்டிக் கிடக்கின்றன மூலிகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும். சாதாரணத் தலைவலியிலிருந்து எய்ட்ஸ் வரையிலான கொடிய நோய்களுக்கும் இங்கே மருந்துண்டு. ஆனால் இந்த வளங்களை அறிந்தோர் குறைவு.
சித்தர்களும் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த சித்துக்களும், மூலிகை மருந்துகளும் சுயநலப் பதர்களால் தவறாகக் கையாளப்பட்டதால், அவர்கள் தங்களைத் தாங்களே மறைத்துக் கொள்வாராயினர். அவர்களது அரும்பெரும் கண்டுபிடிப்புகளும் பரிபாஷையில் பாடல்கள் வடிவில் ஓலைச்சுவடிகளிலேயே தங்கிவிட்டன.
இங்கு சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து வகையான காட்டு மிருங்களும் உண்டு. ஒரே ஒரு புலி மட்டும் இருப்பதாகத் தகவல். மற்றபடி, மான், கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை, முள்ளம்பன்றி போன்ற அனைத்து விலங்குகளும் உண்டு. கோவில் பகுதியில் விலங்குகள் நுழையாது. நாங்கள் சென்ற போது பன்றியும் தேவாங்கும் கண்ணில் தென்பட்டது.
மலைகளின் நடுவே பெரும்பாலும் சிறிய அளவிலாவது தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். மக்கள் மலையேறிக் களைத்தவுடன் நீரோடையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வர். நாங்கள் சென்ற போது நீரோடையில் தண்ணீர் இல்லை.
இன்னும் மேலே ஏற இந்த இடத்தில் சின்ன பசுக்கிடை என்கிற அறிவிப்பு இருந்தது. இது சமவெளிப்பகுதி ஆகும். சில பசுக்கள் கழுத்தில் சத்தம் கேட்கும் மணிகளுடன் மேய்ந்து கொண்டிருந்தன. இன்னும் மேலே ஏற ஏற எதிர்படுவது நாவல் ஊற்று. பலவித சத்துகள் நிறைந்ததாக நாவல் மரத்தடியில் அமைந்த இந்த ஊற்று சர்க்கரை வியாதிக்கு சிறந்த நிவாரணி என்கிறார்கள். இது நிலத்தில் அடியில் இருந்து பொங்கி வந்து கொண்டே இருக்கிறது.
தொடர்ந்த பயணத்தில் நீங்கள் சதுரகிரி மலைப்பயணத்தில் முக்கால்வாசிக்கும் மேலாக வந்துவிட்டீர்கள். அந்த இடம்தான் சதுரகிரி நுழைவாயிலாக கருதப்படும் பிலாவடிக்கருப்பர் சந்நதி. பலாமரத்தடியில் அமர்ந்து இருக்கும் பிலாவடிக்கருப்பர் என்கிற சதுரகிரி காவல் தெய்வத்தின் கோவிலின் பின்புறம் தைலக்கிணறு இருப்பதாக சித்தர்களின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.
இன்னும் சிறிதுநேர நடைப்பயணத்திலே சதுரகிரிநாதர் சுந்தரலிங்க சுவாமி சந்நதியை அடைந்துவிடலாம்.
மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் லிங்க வடிவத்தில் பரமசிவன். ஆகாய கங்கை என அழைக்கப்படும் சிறு நீர்வீழ்ச்சி இவ்விரு கோயில்களுக்கு நடுவில் சிறு ஓடையாக ஓடுகிறது. இந்நீர் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
சுந்தர மகாலிங்கத்தைத்தான் முதலில் தரிசிக்கின்றனர். அதன் பின்னரே சந்தன மகாலிங்கத்துக்குச் செல்கின்றனர். அங்கு செல்ல சுமார் 15 நிமிடங்கள் நடக்க (ஏற) வேண்டும்.சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரமகாலிங்கம் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளன.
சந்தன மகாலிங்கம் கோவிலில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. பதினெட்டுச் சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகர், மஹாதேவி மற்றும் நவகிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன. சட்டநாதச் சித்தர் வாழ்ந்த குகையும் இங்குள்ளது.
சுந்தர மகாலிங்கத்தைத்தான் முதலில் தரிசிக்கின்றனர். அதன் பின்னரே சந்தன மகாலிங்கத்துக்குச் செல்கின்றனர். அங்கு செல்ல சுமார் 15 நிமிடங்கள் நடக்க (ஏற) வேண்டும்.சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரமகாலிங்கம் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளன.
சந்தன மகாலிங்கம் கோவிலில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. பதினெட்டுச் சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகர், மஹாதேவி மற்றும் நவகிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன. சட்டநாதச் சித்தர் வாழ்ந்த குகையும் இங்குள்ளது.
கோயிலில் இருந்து ஒரு மணி நேரம் இன்னும் மேலே ஏறினால் தவசிக் குகை என்னும் குகைப் பகுதியை அடையலாம். இவ்விடத்திற்குச் சென்ற அனுபவஸ்தர்களுடன் மட்டுமே செல்லவேண்டும். ஏனென்றால் முதலில் இருந்தது போல் ஆறடி அகலப் பாதை கூட இங்கு கிடையாது. மிகவும் குறுகலான, ஏன் பாதையே இல்லாத வழிகளிலும் பயணிக்க வேண்டியதிருக்கும். சிறிது வழி பிசகிவிட்டாலும் சிரமம்தான்.
தவசிக் குகையில் அனைத்து சித்தர்களும் வசித்ததாகவும், இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் பேச்சு நிலவுகிறது!
குகை மிகவும் குறுகலாக ஒருவர் மட்டுமே தவழ்ந்து செல்லக் கூடிய வகையில் இருக்கும். அதிக பட்சம் நான்கைந்து பேர்கள் மட்டும் உள்ளே சென்று அமர முடியும். அதற்கப்பால் வெறுமனே கற்சுவர்தான். ஆனால் இந்த கற்சுவரில் இருக்கும் சிறு சிறுதுளைகள் வழியாக புத்துணர்வூட்டும் குளிர்ந்த காற்று சில்லென வருகிறது. உள்ளே ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்யக்கூடும் என்பது நம்பிக்கை.
பொதுவாக மற்றொரு நம்பிக்கை என்னவென்றால் பௌர்ணமி நாட்களில் சித்தர்கள் மலையிலிருந்து இறங்கி சுந்தர மகாலிங்கத்தும் சந்தன மகாலிங்கத்துக்கும் நடுநிசியில் பூஜை செய்ய வருவர் என்பதுதான்.
சதுரகிரியில் அமாவாசை நாள்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர் கூட்டம் திரளும். அதிலும் ஆடி அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.ஆடி அமாவாசையன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள்.
தை அமாவாசை அதற்கு அடுத்தபடியாக விசேஷமானதாகும்.அமாவாசை தவிர, பௌர்ணமி தினத்தன்றும் விசேஷ பூஜைகள் நடக்கும். தற்போது பிரதோஷம், சிவராத்திரி தினங்களன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற விசேஷ தினங்கள் தவிர மற்றைய நாட்களில் பக்தர்கள் வருகை அவ்வளவாக இருக்காது.எல்லா நாட்களிலும் பூஜை நேரம் தவறாமல் நடக்கும். அதிகாலை மூன்று மணி, ஆறு மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை ஆறு மணி என நான்கு காலப் பூஜை செய்யப்படுகிறது.
அதிகாலை மூன்று மணியளவில் சிவ-பார்வதியை பள்ளியெழுப்பிவிட்டு சப்த கன்னியர் வனத்திற்குள் சென்று விடுவர் என்று ஒரு ஐதீகம். அவ்வேளையில் பூஜை நடக்கும்.
தவசிக் குகையில் அனைத்து சித்தர்களும் வசித்ததாகவும், இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் பேச்சு நிலவுகிறது!
குகை மிகவும் குறுகலாக ஒருவர் மட்டுமே தவழ்ந்து செல்லக் கூடிய வகையில் இருக்கும். அதிக பட்சம் நான்கைந்து பேர்கள் மட்டும் உள்ளே சென்று அமர முடியும். அதற்கப்பால் வெறுமனே கற்சுவர்தான். ஆனால் இந்த கற்சுவரில் இருக்கும் சிறு சிறுதுளைகள் வழியாக புத்துணர்வூட்டும் குளிர்ந்த காற்று சில்லென வருகிறது. உள்ளே ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்யக்கூடும் என்பது நம்பிக்கை.
பொதுவாக மற்றொரு நம்பிக்கை என்னவென்றால் பௌர்ணமி நாட்களில் சித்தர்கள் மலையிலிருந்து இறங்கி சுந்தர மகாலிங்கத்தும் சந்தன மகாலிங்கத்துக்கும் நடுநிசியில் பூஜை செய்ய வருவர் என்பதுதான்.
![]() |
தவசிக் குகை |
சதுரகிரியில் அமாவாசை நாள்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர் கூட்டம் திரளும். அதிலும் ஆடி அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.ஆடி அமாவாசையன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள்.
தை அமாவாசை அதற்கு அடுத்தபடியாக விசேஷமானதாகும்.அமாவாசை தவிர, பௌர்ணமி தினத்தன்றும் விசேஷ பூஜைகள் நடக்கும். தற்போது பிரதோஷம், சிவராத்திரி தினங்களன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற விசேஷ தினங்கள் தவிர மற்றைய நாட்களில் பக்தர்கள் வருகை அவ்வளவாக இருக்காது.எல்லா நாட்களிலும் பூஜை நேரம் தவறாமல் நடக்கும். அதிகாலை மூன்று மணி, ஆறு மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை ஆறு மணி என நான்கு காலப் பூஜை செய்யப்படுகிறது.
அதிகாலை மூன்று மணியளவில் சிவ-பார்வதியை பள்ளியெழுப்பிவிட்டு சப்த கன்னியர் வனத்திற்குள் சென்று விடுவர் என்று ஒரு ஐதீகம். அவ்வேளையில் பூஜை நடக்கும்.
சித்தர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் தரிசனம் காட்டலாம். இரவு பூஜை நேரங்களில் சில வேளைகளில் சட்டநாதர் இராஜநாகமாகவும், உடும்பாகவும் மாறி தோன்றுவதுண்டாம்.
பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இரவில் மலையில் தங்கியிருந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கும். இக்காட்சி யார் கண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்று இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும். பெரும் பாக்கியவான்கள் மட்டுமே இப்பேறு பெற்றவர்கள் என்கிறார்கள். மலையில் பார்த்த ஒருவர் எனக்கு சித்தர் போல காட்சியளித்தார். இவர் தான் எனக்கு பர்வத மலை சென்ற போது வழி காட்டியவர். இவர் தான் எனக்கு சதுரகிரி மலை பற்றி சொன்னவர்.
உணவு வசதிகள்
இங்கு மூன்று, நான்கு அன்னதான மடங்கள் உள்ளன. எல்லா விசேஷ நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
காலையிலிருந்து மாலை வரை வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அன்னதானம் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்குள்ள மடத்தில் நடு இரவு பனிரெண்டு மணிக்குச் சென்றால்கூட வரவேற்று, இருக்கும் உணவை இன்முகத்துடன் வழங்குகின்றனர்.
காலையிலிருந்து மாலை வரை வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அன்னதானம் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்குள்ள மடத்தில் நடு இரவு பனிரெண்டு மணிக்குச் சென்றால்கூட வரவேற்று, இருக்கும் உணவை இன்முகத்துடன் வழங்குகின்றனர்.
உப்பு, புளியிலிருந்து, காய்கறி, மசாலா, அரிசி என்று அனைத்துப் பொருட்களும் கீழிருந்துதான் மேலே வரவேண்டும். மனிதர்கள் தத்தம் தலையில்தான் மூட்டைகளை சுமந்து கொண்டு வரவேண்டும்.
மலைமீது சிறப்பான வகையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிணறு வெட்டப்பட்டு கோயில்களுக்கும் சிறு குடில்களுக்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் பக்தர்களுக்கு திறந்தவெளி ஷவர் வசதிகூட செய்யப்பட்டுள்ளது!
சரியான பாதையில் மட்டும் ஏறவும். குறுக்கு வழியில் செல்கிறேன் பேர்வழி என சென்றால் எங்காவது மாட்டிக் கொண்டு விடுவீர்கள். கவனம் !!!!
செல்லும் பாதையில் ஏதேனும் விலங்குகள் எதிர்ப்பட்டால் சற்று நிதானித்து எந்த சப்தமும் எழுப்பாமல் அவை அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் மேலே செல்லவும்.வனத்தினுள் செல்ல வேண்டும் என்ற ஆர்வமுடையோர் தகுந்த வழிகாட்டுபவர்களுடன் செல்லவும். இரவில் மலையில் ஏற டார்ச் போன்ற உபகரணங்கள் வைத்துக் கொள்ளவும்.
![]() |
ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் |
பிறகு தென்காசி மற்றும் குற்றாலம் சென்றோம். ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி 3 மணி நேர பேருந்து பயணம். குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளித்த பிறகு மாலையில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சென்றோம். இது தான் ஆசியாவிலேயே 2 வது மிகப்பெரிய கோபுரம்.
![]() |
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் |
மாலையில் தென்காசியிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் மறுநாள் காலை சென்னை வந்தடைந்தோம்.
Visit my other Blog in English: http://interestingindianravi.blogspot.in/
Visit my Hindi Blog: http://merabharatmahan-mountabu.blogspot.in/